பொது செய்தி

தமிழ்நாடு

3 லட்சம் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வர விருப்பம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை : வெளி மாநில தொழிலாளர்கள், 3 லட்சம் பேர் தமிழக வர விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர்களை அழைத்து வர, சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்ய, கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கட்டுமான பணிகள், மார்ச் இறுதியில் நிறுத்தப்பட்டன. அதன் பின், வேலையின்றி இருந்த கட்டுமான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். முடிவுஇதனால், ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டாலும், கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தொழிலாளர்களை மீண்டும் தமிழகம் அழைத்து வர, கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து, கட்டுமான துறையினரின் கோரிக்கை அடிப்படையில், வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறியதாவது:ஊரடங்கு காலம் முடிவுக்கு வரும் நிலையில், வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வர இருக்கிறோம். அரசு உத்தரவுப்படி, இவர்களுக்கான, 'இ - பாஸ்' வாங்குவதற்கான பணிகளை, கட்டுமான நிறுவனங்கள் துவங்கிஉள்ளன.'இ - பாஸ்'தற்போதைய நிலவரப்படி, ஒடிசா, பீஹார் மாநிலங்களைச் சேர்ந்த, 3 லட்சம் தொழிலாளர்கள், தமிழகம் வர விருப்பம் தெரிவித்துள்ளனர். 'இ - பாஸ்' பெற்று, அவர்களை அழைத்து வர, சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.அவர்களை தனிமைப்படுத்தி, தங்க வைப்பதற்கான இடவசதி, சென்னை புறநகரில் பல்வேறு இடங்களில், ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, கட்டுமான நிறுவனங்கள் துவங்கி உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X