டுபாக்கூர் அழைப்புகளால் நடிகர் அலறல்: போலீசார் வழக்குப்பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டுபாக்கூர்' அழைப்புகளால் நடிகர் அலறல்: போலீசார் வழக்குப்பதிவு

Added : ஜூலை 30, 2020
Share

சென்னை : நடிகர் சரத்குமாரின், மொபைல் போனுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பெயரில், 'டுபாக்கூர்' அழைப்புகள் வந்தது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நாட்டாமை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரத்குமார். இவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வருகிறார்.சில தினங்களாக, இவரது மொபைல் போனுக்கு, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பெயரில் அழைப்புகள் வந்துள்ளன. சரத்குமார் தொடர்பு கொண்டதுபோல, அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு, டுபாக்கூர் அழைப்புகள் சென்றுள்ளன. இதனால், அவர், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இதுகுறித்து, சரத்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப் பிரிவு, சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X