சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் கடத்தல் மூன்று பேர் கைது

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கூடலுார் : முதுமலை வனப் பகுதியில் நடக்கும் சந்தன மரக் கடத்தலில், கர்நாடக கொள்ளையருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் சந்தன மரம் வெட்டி, கடத்தப் படுவதாக, வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் உத்தரவுபடி, வன அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மசினகுடி வனத்தில் ரோந்து சென்றபோது, வன ஊழியர்களை கண்ட, நான்கு பேர் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்று, இருவரை பிடித்தனர். 27 கிலோ சந்தன மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மசினகுடியை சேர்ந்த மகேஷ்குமார், 32, கேத்தன், 48, என்பது தெரிந்தது. தப்பி ஓடிய கர்நாடக, குண்டல்பேட் பகுதியை சேர்ந்த கரியன், 30, என்பவரையும் கைது செய்தனர்.இந்த கடத்தலில், கர்நாடக வன கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக, மூவரை தேடி வருகின்றனர்.வனத் துறையினர் கூறுகையில், 'இவர்கள், முதுமலையில் வேறு இடங்களிலும் மரங்களை வெட்டி, கர்நாடகாவுக்கு கடத்தி இருக்கலாம். தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X