பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு விமானத்தில் 473 இந்தியர்கள் வருகை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை : மூன்று நாடுகளில் சிக்கித் தவித்த, 473 இந்தியர்கள் நேற்று, சிறப்பு விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, சிறப்பு விமானங்களை இயக்கி, மத்திய அரசு மீட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, பிலிப்பைன்ஸ், ஓமன், யு.ஏ.இ., ஆகிய, மூன்று நாடுகளில் இருந்து, மூன்று சிறப்பு விமானங்கள், நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு வந்தன.அந்த விமானங்களில், 473 இந்தியர்கள் வந்தனர். அவர்கள் அனைவருக்கும், சென்னை விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தனிமைப்படுத்துதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.சென்னையில் இருந்து நேற்று, 29 விமான சேவைகள், பல்வேறு நகரங்களுக்கும், பல்வேறு நகரங்களில் இருந்து, 29 விமான சேவைகள், சென்னைக்கும் இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X