பொது செய்தி

தமிழ்நாடு

குளமாகும் வைகை அணை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
குளமாகும் வைகை அணை

ஆண்டிபட்டி : நீர்வரத்து குறைந்ததால் வைகை அணை குளம்போல் காட்சியளிக்கிறது.

தேனி மாவட்டம் வைகை அணை நீர்பிடிப்பில் சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தும் அணைக்கு நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் பயன்பாட்டிற்கு பின் குறைந்த அளவில் வினாடிக்கு 14 கனஅடியாக வைகை அணையில் சேர்கிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு இருப்பில் உள்ள நீர் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் வைகை அணை நீர்மட்டம் குறைவதுடன் நீர்தேக்கம் சுருங்கி வருகிறது. ஜூலை 23ல் 31.38 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 30.74 அடியாக குறைந்தது (மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேறுகிறது. அணையின் நீர்இருப்பு 399 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X