பெருங்குடி ஏரியில், கழிவு நீர் கலப்பதை முழுமையாக தடுத்து, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.சென்னை, பெருங்குடி ஏரி, 57 ஏக்கர் பரப்பளவு உடையது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தப்பியுள்ள ஏரிகளில், இதுவும் ஒன்று.ஆக்கிரமிப்பு இல்லை என்றாலும், நடுவில் உள்ள இரண்டு கோவில்கள், ஏரியை இரண்டாக பிரித்துள்ளன.நீராதாரம்கடற்கரை மற்றும் சதுப்பு நிலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, கந்தன்சாவடி, பெருங்குடி பகுதியில், விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கியது.அக்காலத்தில், கடல்நீர் உட்புகாமல் காக்கும் வகையில், கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகளில், 1 கி.மீ.,க்கு இடையே, இரண்டு குளம் என, திருவான்மியூர் முதல், செம்மஞ்சேரி வரை அமைக்கப்பட்டிருந்தன.அவற்றில், பல குளங்கள் மாயமான நிலையில், அதன் துவக்கமான, பெருங்குடி ஏரி மட்டும், காப்பாற்றப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையும், பெருங்குடி பேரூராட்சியாக இருந்தபோது, அதன் நிர்வாகமும், 1997 முதல், ஏரியை, 30 அடி வரை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, காப்பாற்றி வந்துள்ளன.ஏரியை சுற்றி ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. தற்போது, பல இடங்களில், சமூக விரோதிகளால் கம்பி வேலி நாசப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஏரியை பொறுத்தவரை, ஒரே பிரச்னை, கழிவு நீர் கலப்பது தான். ஏரியின் மேற்கில், கல்லுக்குட்டை பகுதியில், கல்வித் துறைக்கு சொந்தமான, 200 ஏக்கர் நிலம் உள்ளது.அதில், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்பாளர்கள், வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு, எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கக் கூடாது என, பல ஆண்டுகளுக்கு முன், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அதன் காரணமாக, ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு, அடிப்படை வசதிகள் இல்லை. அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், அருகில் உள்ள குட்டையில் சேகரமாகி, மழைநீர் வடிகால் மூலம் ஏரியில் கலக்கிறது.கோரிக்கைகடந்தாண்டு, தண்ணீர் பஞ்சம் காரணமாக, நம் நாளிதழ், 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, சமூக ஆர்வலர்கள், நலச் சங்கத்தினரை ஊக்கப்படுத்தியது.அதன் பலனாக, சென்னை, புறநகரில் பல நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டன. பெருங்குடி ஏரியில், தன்னார்வலர்கள் கழிவுகளை அகற்றினர்.இந்த ஏரியின், கம்பி வேலிகள் உடைக்கப்பட்டதால், அதிகாலையில் கழிப்பறையாக பலர் பயன்படுத்துகின்றனர். மேலும், துணி துவைத்து, குளிக்கும் இடமாகவும் மாற்றி உள்ளனர்.எனவே, ஏரியில் கழிவு நீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். ஏரியை முழுமையாக பராமரித்து, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றி, சுற்று வட்டார பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. -- நமது நிருபர்- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE