பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் நகராட்சிக்கு மின் வாரியம் கடிதம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

தாம்பரம், :மேற்கு தாம்பரம், கல்யாண் நகரில், தாம்பரம் பெரிய ஏரியை ஒட்டி உள்ள, கழிவு நீரேற்று நிலையம் அருகே, மின்மாற்றி அமைத்து, உயர் மின்வடங்கள் இணைக்க, மின் வாரியம் முடிவு செய்தது.மக்கள் எதிர்த்ததால், நம் நாளிதழில், இம்மாதம், 21ல், இது குறித்து செய்தி வெளியானது. தொடர்ந்து, நகராட்சிக்கு மின் வாரிய அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உயர் அழுத்த மின் கம்பங்களுக்கு பதில், புதை மின்வடங்கள் பதிக்க, மக்கள் கோரிக்கை விடுத்ததால், அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், புதை மின்வடங்கள் பதிக்க, கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின் வாரிய அதிகாரிகள் கடிதம் அனுப்பியது குறித்து, தகவல் தெரியவில்லை. அனுப்பி இருந்தால், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.'தினமலர்' செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்//

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X