பொது செய்தி

தமிழ்நாடு

சைதையில் ஊழியர் குடியிருப்பு ௧௯ மாடிகளுடன் கட்ட ஏற்பாடு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை :சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், 19 மாடி அரசு ஊழியர் குடியிருப்பு கட்டும் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது.பதவி உயர்வு, பணி இடமாறுதல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். திடீரென இடமாற்றத்தில் வருபவர்கள், வீடு கிடைக்காமல், சென்னையில் அலைய நேரிடுகிறது. அதிக வாடகை வசூலிப்பதால், பலரும் அதை கட்டுவதற்கு சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, சென்னையில், அரசு ஊழியர்களுக்கு போதுமான கட்டடங்களை கட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.இதையடுத்து, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இங்கு, கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், தார்சாலை, மின்விளக்கு, மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவங்கப்படவுள்ளன. இதேபோல, 93 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 19 மாடி குடியிருப்பு கட்டடம் கட்டப்படவுள்ளது. இதில், மொத்தம், 190 குடியிருப்புகள் அமையவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X