சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் மீது வி.ஏ.ஓ.,க்கள்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

குன்றத்துார் : 'கொரோனா சோதனை சாவடியில், தேவையான வசதிகளை செய்து தரவில்லை; அலுவலர்களை தரக்குறைவாக பேசுகிறார்' என, குன்றத்துார் தாசில்தார் மீது, வி.ஏ.ஓ.,க்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, வி.ஏ.ஓ.,க்கள் சிலர் கூறியதாவது:குன்றத்துார் தாலுகாவில், 82 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, கொரோனா தடுப்பு பணியாக, சோதனை சாவடியில் பணி ஒதுக்கப்பட்டது.ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, ஏதாவது குறை என்றால், தாசில்தாரிடம் தான் தெரிவிக்க வேண்டும். வசதிகள் செய்து தரப்படாதது குறித்து, புகார் தெரிவித்தோம்.ஆனால், தாசில்தாரோ, காதில் வாங்காமல், எங்களை தரக்குறைவாக பேசினார். ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாச்சியரிடம் புகார் தெரிவித்தோம். அவர் தலையிட்டு, வசதிகளை செய்து கொடுத்தார். கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்ந்து, தரக்குறைவாக நடத்தும், தாசில்தாரை மாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X