வழிப்பறி திருடர்களை சிக்க வைத்த 'மூன்றாவது கண்!'

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

அபிராமபுரம், சென்னையில், செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர்களை, கண்காணிப்பு கேமரா உதவியுடன், போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னையில், சமீபமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. குறிப்பாக, மயிலாப்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், அடிக்கடி அரங்கேறிய செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட திருட்டு சம்பவங்களால், மக்கள் பீதியடைந்து உள்ளனர். கைவரிசைஇது குறித்து, ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, கிழக்கு சரக இணை ஆணையர் சுதாகர், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்ஷன் தலைமையில், தனிப்படை அமைத்தார்.தனிப்படை போலீசார், குற்றச்சம்பவங்கள் நடந்த பகுதி மட்டுமின்றி, பெரும்பாக்கம் முதல் எர்ணாவூர் வரையில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.இதில், புளியந்தோப்பு, ஆடுதொட்டியைச் சேர்ந்த அபிமன்யு, 21, நஜீர், 20, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த அஜய் ராகுல், 20, ஆகிய மூவரும், முக கவசம் அணிந்து, கைவரிசை காட்டியது தெரிய வந்தது.பாராட்டுநேற்று மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, விலை உயர்ந்த, எட்டு இருசக்கர வாகனங்கள், 8 சவரன் நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.இவர்கள் மீது, மாதவரம், வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன.சிறப்பாக செயல்பட்டு, திருடர்களை கைது செய்த, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையினரை, கூடுதல் கமிஷனர் தினகரன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X