சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆலந்துார் விபத்தில் வாலிபர் பலி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஆலந்துார், :ஆலந்துாரில், மெட்ரோ ரயில் துாண் மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், ஒருவர் பலியானார்; மற்றொருவர் காயங்களுடன் தப்பினார்.சென்னை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல், 25; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர், சூளைமேடைச் சேர்ந்த சதீஷ்குமார், 25.இருவரும், தங்களது நண்பரை சந்திக்க, ஆலந்துார் நோக்கி, இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் சென்றனர்.ஆலந்துார் ஆசர்கானா வளைவு அருகே சென்றபோது, மெட்ரோ ரயில் துாணில், இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதி, விபத்து ஏற்பட்டது.இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்த மின் கம்பத்தில் தலை மோதியதில், ராகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ்குமார் காயங்களுடன் உயிர் தப்பினார்.இது குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X