சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார்களை விற்று மோசடி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கானத்துார் :உத்தண்டியில், அடமானம் வைத்த சொகுசு கார்களை விற்று, பண மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் கிவிராஜ், 28. இவர், தன், பி.எம்.டபிள்யு., மற்றும் 'ஆடி' ஆகிய, இரண்டு சொகுசு கார்களை, மூன்று மாதங்களுக்கு முன், உத்தண்டியைச் சேர்ந்த தணிகா, 40, என்பவரிடம், அடமானம் வைத்து, 6 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.சில தினங்களுக்கு முன், பணத்தை திருப்பி கொடுத்து, கார்களை கேட்டபோது, வாகன பதிவு சான்று தொலைந்து விட்டதாக, தணிகா கூறி உள்ளார்.மேலும், பி.எம்.டபிள்யு., காரை, கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு, 15 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அதேபோல் ஆடி காரை, ஓசூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு, பல லட்சம் ரூபாய், பேரம் பேசி விற்றுள்ளார்.கானத்துார் போலீசார், நேற்று தணிகாவை கைது செய்து, இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X