சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஆர்.கே.நகர், :ஆர்.கே.நகரில், வாகன சோதனையின் போது, 15 மூட்டைகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை, தண்டையார்பேட்டை, சாஸ்திரி நகரில், நேற்று முன்தினம் இரவு, ஆர்.கே.நகர் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே, ஆட்டோ ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது.சந்தேகமடைந்த போலீசார், மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்டவர், கொடுங்கையூரைச் சேர்ந்த மணி, 25, என்பது தெரிய வந்தது.ஆட்டோவை சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட, 'ஹான்ஸ்' போதை புகையிலை பொருள், ஏழு மூட்டைகள் இருந்தன.அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவல் படி, வண்ணாரப்பேட்டை - வினோபா நகரில் பதுக்கி வைத்திருந்த, ஒரு மூட்டை ஹான்ஸ், கொடுங்கையூரில் பதுக்கி வைத்திருந்த, ஏழு மூட்டை ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.பறிமுதலான, 15 மூட்டை ஹான்சின் மதிப்பு, 25 லட்சம் ரூபாய் வரை இருக்கக்கூடும் என, போலீசார் தெரிவித்தனர். இது குறித்து, மேலும், இருவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X