சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்டத்தில் மோதல் இளைஞருக்கு 'குத்து'

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மாதவரம் :சூதாட்டத்தில், இளைஞரை, அவருடன் விளையாடியவர்களே, பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.சென்னை, மாதவரம் தற்காலிக பூ, பழம் விற்பனை மார்க்கெட்டில், சென்னை உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சுமை துாக்கும் வேலை செய்து வருகின்றனர். அவர்கள், ஓய்வு நேரத்தில், மாதவரம் ரவுண்டானா மேம்பாலத்தின் கீழே, பணம் வைத்து சூதாடி வந்தனர்.நேற்று முன்தினம் மாலையும், பாரிமுனை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த யேசுராஜ், 35, அவருடன் வேலை செய்யும் முத்து, தமிழரசன் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். யேசுராஜ், அவர்களிடம், தொடர்ச்சியாக பணம் வென்றார்.தோல்வி அடைந்த இருவரும், அவரிடம் கடனாக பணம் கேட்டனர். அவர் தர மறுத்தார். இதனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும், யேசுராஜை தாக்கி, பீர் பாட்டிலால் அவரது கழுத்தில் குத்தினர்.இதையடுத்து, அவர்கள் தப்பி ஓடினர். பலத்த காயமடைந்த யேசுராஜ், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X