சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வீடியோ' அழைப்பில் புகார் நடவடிக்கை எடுத்த போலீசார்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஓட்டேரி, ;'வீடியோ' அழைப்பில் பெண் அளித்த புகாருக்கு, போலீசார் நடவடிக்கை எடுத்தது, வரவேற்பை பெற்றுள்ளது.கொரோனா பரவலால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், போலீஸ் உதவியை நாடி, யாரும் காவல் நிலையம் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னையை தீர்க்க, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மொபைல் வீடியோ அழைப்பில், புகார்களை பதிவு செய்யலாம் என, சமீபத்தில் அறிவித்தார்.அதன்படி, சென்னையில் உள்ள, 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களின், 'வாட்ஸ் ஆப்' எண்கள் வெளியிடப்பட்டன.இதில், பொதுமக்கள் தங்கள் பகுதி துணை ஆணையரிடம், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மதியம், 12:௦௦ மணி முதல், 1:௦௦ மணி வரை, மொபைல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதன் அடிப்படையில், பெங்களூரைச் சேர்ந்த பெண், சமீபத்தில் புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணாவிடம், வீடியோ அழைப்பில் புகார் ஒன்றை அளித்தார்.புகாரில், ஓட்டேரி, கொசப்பேட்டையில் வசித்து வரும் உறவினரான, 78 வயது மூதாட்டியை, தன் சகோதரர் சரிவர கவனிப்பதில்லை என, அவர் கூறியுள்ளார்.இந்த புகாரை பெற்ற ஓட்டேரி போலீசார், அந்த மூதாட்டிக்கு உதவினர். மூதாட்டியின் உறவினரை எச்சரித்து, அவரை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்தனர்.போலீசாரிடம், வீடியோ அழைப்பில் புகார் அளிக்கும் இந்த வசதி, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X