பொது செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சென்னை, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு, மழைநீர் வரத்து மீண்டும் துவங்கிஉள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி., தற்போது, ஒட்டுமொத்தமாக 4.56 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது. பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகள் வறண்டுவிடும் கட்டத்தில் உள்ளன. புழல் ஏரியில், 2.53 டி.எம்.சி., செம்பரம்பாக்கம் ஏரியில், 1.86 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. நேற்று முன்தினம், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 3.9 செ.மீ., மழை பதிவானது. இதனால், ஏரிக்கு வினாடிக்கு, 23 கன அடி நீர்வரத்து கிடைத்தது. புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், லேசான மழையுடன் சூறைக்காற்று வீசியது. ராட்சத அலைகள் எழுந்தன. ஏரியின் தடுப்பு சுவரை தாண்டி, நீர் வெளியே விழுந்தது. ஏரி நிரம்பி வழிவதை, பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.ராட்சத அலைகள் உருவானபோது எடுக்கப்பட்ட வீடியோவை, தன் சமூக வலைதள பக்கத்தில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பதிவிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X