மாஜி முதல்வர் மகளிடம் லொள்ளு செய்த சென்னை நபர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' முதல்வர் மகளிடம் 'லொள்ளு' செய்த சென்னை நபர்

Added : ஜூலை 30, 2020
Share
சென்னை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகளிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசிய மர்ம நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரிப், 54; டாக்டர். இவரது கணவர், சென்னையில் கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர்கள், குடும்பத்துடன், ராஜா அண்ணாமலைபுரம், கேசவ பெருமாள்புரத்தில்

சென்னை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகளிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசிய மர்ம நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரிப், 54; டாக்டர். இவரது கணவர், சென்னையில் கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர்கள், குடும்பத்துடன், ராஜா அண்ணாமலைபுரம், கேசவ பெருமாள்புரத்தில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,ரூபையா ஷெரிபின் மொபைல் போன் எண்ணிற்கு, மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசியுள்ளார்.இது குறித்து அவர், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார், விசாரணையை, சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X