சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

Added : ஜூலை 30, 2020
Share

காசிமேடு,காசிமேடில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிறுவன் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை, எண்ணுார், நேதாஜி நகர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த, வேலு என்பவரது மகன், ஆகாஷ், 16. இவர், வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும், வேலை செய்து வந்தார்.நேற்று அதிகாலை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், ஜீரோ கேட் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து, காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X