பொது செய்தி

தமிழ்நாடு

வரத்துக்கால்வாயை சீரமைக்க கோரிக்கை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 வரத்துக்கால்வாயை சீரமைக்க கோரிக்கை

கண்டவராயன்பட்டி:திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டி பழைய ஊரணிக்கு மழை காலத்தில் நீர் வரத்திற்கான வரத்துக்கால்வாயை துார்வாரி சீரமைக்க கிரா மத்தினர் கோரியுள்ளனர்.

இக்கிராமத்தில் கண்மாய்க்கு அடுத்து மிகவும் பெரிய ஊரணியாக பழைய ஊரணி உள்ளது. சில படித்துறைகளுடன், முள்கம்பி வேலியுடன் உள்ள இந்த ஊரணி செட்டியூரணி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஊரணியில் உள்ள கிணற்றில் வற்றாத நீர் உள்ளதால் வறட்சியான காலங்களில் இப்பகுதியினருக்கு குடிநீராக பயன்படுகிறது.

ஊரணி அருகிலுள்ள தோட்டங்களில் பெய்யும் மழை நீர் வரத்துக்கால்வாய் மூலம் ஊரணிக்கு வருகிறது. அண்மை காலமாக மழை பெய்யாமல் வரத்துக்கால்வாய் துார்ந்து விட்டன. இதனால் நீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது மழை பெய்யத்துவங்கியுள்ள நிலையில் வரத்துக்கால்வாய்களை புனரமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X