தஞ்சையில் தொடர் மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தஞ்சையில் தொடர் மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

Added : ஜூலை 30, 2020
Share
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், நீரில் மூழ்கின. பாபநாசத்தில் நெல்மணிகள் நீரில் நனைந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை மழை பெய்தது.மாவட்டத்தில் சராசரியாக, 2 செ.மீ., மழை பதிவாகினது. தொடர் மழை காரணமாக, கும்பகோணம் அருகே பழியஞ்சியநல்லுார், திருக்காட்டுப்பள்ளி, எஸ். புதுார் கிராமங்களில், 3௦௦
 தஞ்சையில் தொடர் மழை  நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், நீரில் மூழ்கின. பாபநாசத்தில் நெல்மணிகள் நீரில் நனைந்தன.

தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை மழை பெய்தது.மாவட்டத்தில் சராசரியாக, 2 செ.மீ., மழை பதிவாகினது. தொடர் மழை காரணமாக, கும்பகோணம் அருகே பழியஞ்சியநல்லுார், திருக்காட்டுப்பள்ளி, எஸ். புதுார் கிராமங்களில், 3௦௦ ஏக்கரில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த, நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பாபநாசம் அருகே, கணபதி அக்ரஹாரம் பகுதியில், அறுவடை செய்த நெல் மணிகளை விற்பனை செய்ய, அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.கொள்முதல் நிலையத்தில் இடப் பற்றாக்குறையால், நெல் குவியல்கள், சாலையில் திறந்தவெளியில் கிடக்கிறது.

தொடர் மழையால் நெல் மணிகள் நனைகின்றன.வீடுகள் இடிந்தனகுமரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, குழித்துறையில், அதிகபட்சமாக, 5 செ.மீ., மழை பதிவானது. கிள்ளியூர் தாலுகாவில் ஒன்பது வீடுகள் இடிந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் லேசான துாறலுடன் துவங்கிய மழை, கன மழையாக மாறி, விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால், மணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஒகேனக்கல்காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஒகேனக்கல் நீர் பிடிப்பு பகுதியான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 7,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 8,800 கன அடியாக அதிகரித்தது.இதனால், ஒகேனக்கலில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X