தமிழ்நாடு

* மதுரைக்கு வர வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தயக்கம் பல மாதங்களாக காலியாக இருக்கும் பணியிடங்கள்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 * மதுரைக்கு வர வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தயக்கம்    பல மாதங்களாக காலியாக இருக்கும் பணியிடங்கள்


மதுரை :மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,க்கள்), மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் பல மாதங்களாககாலியாக உள்ளன. இங்கு வர அதிகாரிகள் தயங்குகின்றனர். இங்கு தெற்கு, வடக்கு, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மேலுார், திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் யூனிட் அலுவலகங்கள் உள்ளன. தெற்கு, மத்தியில் ஆர்.டி.ஓ., பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சுரேஷ் தெற்கிற்கும், வடக்கு ஆர்.டி.ஓ., செல்வம் மத்திக்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை- 1ல் இரண்டு பேருக்கு பதில் தலா ஒருவரே பணியில் உள்ளனர். கிரேடு- 2 நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. வடக்கு ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை. உசிலம்பட்டி யூனிட் அலுவலகத்திலும் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் வாகனங்களுக்கான எல்.எல்.ஆர்., டெஸ்ட் மற்றும் புதுப்பிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுவலர்கள் பற்றாக்குறையால் குறைந்தது எல்.எல்.ஆருக்கு 15 நாட்கள், டெஸ்டிற்கு 30 நாட்கள், வாகன உரிமம் புதுப்பிக்க ஒரு மாதம் ஆகிறது. ஊரடங்கு முடிவதற்குள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் அடுத்தடுத்த முறைகேடு புகார்களில் அதிகாரிகள் சிலர் சிக்கியதால் இங்கு 'டிரான்ஸ்பரில்' அதிகாரிகள் வர தயங்குகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜூலை-202008:23:30 IST Report Abuse
Lion Drsekar " ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் அடுத்தடுத்த முறைகேடு புகார்களில் அதிகாரிகள் சிலர் சிக்கியதால் இங்கு 'டிரான்ஸ்பரில்' அதிகாரிகள் வர தயங்குகின்றனர்" இதையும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் இவர்கள் வேறு ஏதாவது துறைக்கு சென்று நாட்டுக்காக உழைக்கலாம், விபத்தும் ஏற்படாது, மன்னிக்கவும் மூன்று தலைமுறையாக காண்பது இன்னமும் அப்படியேதான் இருக்கிறது எந்த மாற்றமும் இல்லை, ஆனால் இன்று அதிக அளவில் கொடுத்தால் வேலை நடக்கிறது, முன்பெல்லாம் இரயில் நிலையத்தில் ஒரே ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் மட்டுமே இருப்பார், அவரே காலை வந்து குப்பைகளை கூட்டுவார், டிக்கட் கொடுப்பார், மணிஅடிப்பார், தற்போது மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் கணினி வந்து விட்டது ஆகவே தனித்தனி ஆட்கள் நியமித்துவிட்டார்கள், ஆனால் இப்போது அதே பதவியில் இருப்பவர்கள் உள்ளே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் அவரது வேலையை கடைநிலை ஊழியர் செய்கிறார், அவரே மணி அடிக்கிறார், அவரே கொடிக்காட்டுகிறார், அவரவர் வேலையை அவரவர் செய்தால் அதிகமான ஊழியர்கள் தேவையே இல்லை, தனியார் கடைகளில் பணியாளர்களுக்கு உட்க்காருவதற்கு இருக்கையை இருக்காது , அதுபோல் தேனீக்களைப் போல் சுறுசுறுப்பாகி எப்போதும் ஓடியாடி பணியாற்ற இருக்கையை பயன்படுத்தாமல் மக்களுக்காக உழைத்தால் எதற்கு அதிக நபர்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூலை-202003:06:24 IST Report Abuse
NicoleThomson அங்கேயே படித்து பட்டம் பெற்ற எவ்ளோ இளைஞ இளைஞிகள் உள்ளனர் அவர்களுக்கு கான்டராக்ட் முறையில் வேலை கொடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X