சாலை வரியை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:மதுரையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஓட்டுனர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் மணவாளன் துவக்கி வைத்தார். இளைஞரணி பொறுப்பாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஊரடங்கில் வாகனங்கள் இயங்காததால் பாதிக்கப்பட்ட ஓட்டுனர்கள் குடும்பத்திற்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஓட்டுனருக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கலெக்டர் வினய், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூலை-202003:10:29 IST Report Abuse
NicoleThomson எல்லாம் இலவசம் கொடுங்க இலவசம் கொடுங்க என்று தான் போராடுறீங்க , அந்த ஓட்டுநர்களுக்காக நீங்க இந்த ஐந்து மாதங்களில் என்ன பண்ணீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X