சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.60 லட்சம் கையாடல் பெண் அலுவலர் ஓட்டம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

குளித்தலை : குளித்தலை நகராட்சியில், 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பெண் அலுவலரை, கரூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில், 2019 - 20ம் ஆண்டின், வளர்ச்சி திட்டப் பணிகளில், நிதி செலவு குறித்து, 10 நாட்களாக, வருடாந்திர தணிக்கை ஆய்வு நடந்து வருகிறது.பல்வேறு கணக்குகளை ஆய்வு செய்ததில், மோசடி நடந்துள்ளது தெரிந்தது. தணிக்கையாளர்கள், குளித்தலை நகராட்சியில் அப்போது, பணியில் இருந்த கமிஷனர் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், நகராட்சியில் கணக்காளராக பணியாற்றும் சத்யா, ௫௬ என்ற பெண், 59 லட்சத்து, 73 ஆயிரத்து, 435 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், நகராட்சி அலுவலர், பணியாளர்களின் சேமநல நிதி, பி.எப்., நிதி போன்றவற்றில் உள்ள பணத்தை மோசடி செய்துள்ளார். இதை பல்வேறு பெயர்களில், காசோலை வாயிலாக, கையாடல் செய்துள்ளது தெரிந்தது. குளித்தலை நகராட்சி கமிஷனர் மோகன்குமார் புகார்படி, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சத்யாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X