ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தல்| Dinamalar

தமிழ்நாடு

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தல்

Added : ஜூலை 30, 2020
Share

மதுரை, :'பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆக., 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த வேண்டும்,' என, மதுரை நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க செயலாளர் மோகன் அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கீழ மாசி வீதியில் சராசரியாக ஒரு நாளில் ரூ.40 கோடி மதிப்பில் வர்த்தகம் நடக்கும். நான்கு மாதங்களாக வியாபாரம் இன்றி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் வருவாய் ஈட்டுவோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். முன்பை விட தற்போது மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற துவங்கியுள்ளனர். பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு முழுமையாக தளர்த்திட வேண்டும். மாநிலத்திற்குள்ளான போக்குவரத்திற்கு இ பாஸ் நடைமுறையை விலக்கி கொள்ள வேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X