சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகை பூர்ணாவை மிரட்டிய 2 பேர் கைது

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை : நடிகை பூர்ணாவை மிரட்டி, பணம் பறிக்க முயன்ற வழக்கில், கோவையை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம், கண்ணணுாரை சேர்ந்தவர், ஷம்னா காசிம். இவர், தமிழில் பூர்ணா என்ற பெயரில், பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, கொச்சியில் வசித்து வருகிறார்.இவருக்கு திருமணம் நடத்துவதாக கூறி, இவரது குடும்பத்தினரை ஒரு கும்பல் அணுகியது. நகைக்கடை அதிபர்கள் எனக் கூறி, அறிமுகமான அந்த கும்பல், பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றது. இது குறித்த வழக்கில், முகமது ஷெரீப் உட்பட, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

விசாரணையில், மாடல் அழகிகள் உட்பட பல பெண்களிடமும், சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, பணம், நகை பறித்தது தெரிந்தது. பாலக்காட்டில் உள்ள ஓட்டல் அறையில், மாடல் அழகிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும் அம்பலமானது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய, கோவையை சேர்ந்த நஜீப் ராஜா, 27, ஜாபர் சாதிக், 27 ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கேரளாவை சேர்ந்த திரைப்பட சிகை அலங்கார நிபுணர் ஹாரிஸ் என்பவரையும், கைது செய்தனர். மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி என்பவரிடமும், விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X