சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'எமர்ஜென்சி சார்... போன் பேசணும்... தர்றீங்களா' இப்படியும் வழிப்பறி செய்த பொறியாளர்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement


மதுரை, மதுரை நகரில் மாணவர்கள் போல் பேச்சுக்கொடுத்து அலைபேசியை வழிப்பறி செய்த மெக்கானிக்கல் பொறியாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.நகரில் அலைபேசி வழிப்பறி அதிகரித்து வருகிறது. கத்தியால் மிரட்டி பறித்துச்சென்றதாக தினமும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில் அரசரடிசண்முகநாதபுரம் 2வது தெரு ஜான் மகன் விமல்ராஜ் 24, மற்றும் மேலப்பொன்னகரம்8வது தெருவைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட ஒருவர் சிக்கினர்.விசாரணையில் விமல்ராஜ் மெக்கானிக்கல் பொறியாளர் எனத்தெரிந்தது. அலைபேசியில் பேசுபவர்களை நோட்டமிட்டு 'எமர்ஜென்சி சார்...போன் பேசணும். தர்றீங்களா' என கேட்டு வாங்கி பேசுவது போல் நடித்து வழிப்பறிசெய்தது தெரிந்தது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''படிப்பு முடித்த மாணவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கிறது. அதில் கவனம் செலுத்தாமல்திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிதைந்து போகும்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூலை-202003:09:24 IST Report Abuse
NicoleThomson இவனுக்கு பெரிய அளவில் பாரிஸ்டர் பட்டம் கொடுக்கலாம் இல்லை சர் பட்டமும் கொடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X