சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மூதாட்டி கொலை: 4 பேர் சிக்கினர்
மதுரை: பைபாஸ் ரோடு நேரு நகர் பஞ்சவர்ணம் 65. ஜூலை 16 வீட்டில் நகை, பணத்திற்காககொலை செய்யப்பட்டார். தனிப்படை அமைக்கப்பட்டது. கூடல்புதுாரில் நடந்த திருட்டுகள் தொடர்பாக 15 வயது சிறுவர்கள் 2 பேரிடம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் விசாரித்தபோது தேனி ராஜேஷ்கண்ணன் தலைமையில் பஞ்சவர்ணத்தை கொலை செய்தது தெரிந்தது. இவர்களிடம் நகை வாங்கிய சிறுவனின் தாயார் அழகம்மாள் 35, உட்பட இருவரிடம் விசாரணை நடக்கிறது. ராஜேஷ் கண்ணன் தலைமறைவாக உள்ளார்.

'போலீஸ்' என கூறி நகை திருட்டு
மதுரை: எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் விஜயலட்சுமி 58. அப்பகுதியில் நடந்து சென்ற போது 2 பேர் தங்களை 'போலீஸ்' என்று அறிமுகமாயினர். 'திருடர்கள்நடமாட்டம் உள்ளது. நகையை பத்திரமாக எடுத்துச்செல்லுங்கள்' என்று அறிவுரைகூறுவது போல் எட்டரை பவுன் நகையை வாங்கி பேப்பரில் மடித்துக்கொடுத்தனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது நகை திருடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.சூதாட்டம்; 14 பேர் கைதுமேலுார் : ஏ.வல்லாளபட்டி பகுதியில் டி.எஸ்.பி., சுபாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய போஸ் 40, பிரபு 36, உள்ளிட்ட 14 பேரை கைது செய்து ரூ.22 ஆயிரத்து 130 ஐ பறிமுதல் செய்தனர்.ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி7 பேர் கைதுஅலங்காநல்லுார் : வாவிடமருதுாரில் தனியார் தோட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது. எஸ்.ஐ.,ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு தயாராக இருந்த பனையூர் பகுதி4 ஜல்லிக்கட்டு காளைகளை மீட்டனர். அங்கிருந்த 7 பேரை கைது செய்தனர். ஏற்பாடுகளை செய்த ராஜ்குமார், செந்தில், வெற்றியை தேடி வருகின்றனர்.வாலிபர் தற்கொலைஉசிலம்பட்டி: பெருமாள் கோயில் தெரு கார்த்திக் 35. பன், ரஸ்க் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.போக்சோவில் கைதுதிருப்பரங்குன்றம்: மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி சுப்பிரமணியன் 59. இவர் அப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.குழந்தை பலிபேரையூர்:பேரையூர் அருகே சின்னசிட்டுலொட்டி வீராச்சாமி. இவர் நேற்று மாலை தனது லோடு ஆட்டோவில் சிமென்ட் மூடை ஏற்றி தனது வீட்டில் இறக்கிகொண்டு இருந்தார். அப்போது அதேஊரை சேர்ந்த முத்தீஸ்வரனின் 1 வயது குழந்தை ஆட்டோ டயரில் விளையாடி கொண்டு இருந்தான். மூடையை இறக்கி வீராச்சாமி ஆட்டோவை எடுத்தபோது குழந்தை நசுங்கி இறந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்றவர் கைதுபேரையூர்: டி.கல்லுபட்டி போலீசார் சிலார்பட்டியில் ரோந்து சென்றபோது, நாச்சியப்பன் 70. வீட்டீல் வைத்து கஞ்சா விற்றுகொண்டு இருந்தார். அவரை கைது செய்து 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ 1 லட்சத்து 84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.நிதி நிறுவனத்தில் திருட்டுமதுரை: எம்.சத்திரப்பட்டியில் சர்வோதய நானோ நிதிநிறுவனம் உள்ளது. இதன்கதவை உடைத்து 2 கிராம் தங்கம், ரூ.11,500ஐ மர்மநபர் திருடிச்சென்றார். போலீசார்விசாரிக்கின்றனர்.மணல் திருடிய மூவர் கைதுமேலுார் : வெள்ளிமலைப்பட்டி கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளிய சென்னகரம்பட்டி மணிகண்டன் 30, மேலவளவு கார்த்திக் 32, வெள்ளிமலைபட்டிமந்திஉடப்பன் 31 ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்து 2 டிராக்டர், ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X