படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி!

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (48)
Advertisement
படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும், புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக் கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப்படுகிறது. மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே பாடங்களை படிக்கலாம்; 'குரூப்'கள் தொல்லை ஒழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்தையும் கற்க வாய்ப்பு அளிக்கப்படும். பட்டம்
New Education Policy 2020, NEP 2020, NEP, National Education Policy, Prakash Javadekar

படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும், புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக் கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப்படுகிறது. மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே பாடங்களை படிக்கலாம்; 'குரூப்'கள் தொல்லை ஒழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்தையும் கற்க வாய்ப்பு அளிக்கப்படும். பட்டம் வேண்டுமா என்பதை, மாணவர்களே முடியும் செய்யும் வகையில், எந்த ஆண்டிலும் வெளியேறும் வசதி அளிக்கப்படுகிறது. எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு நிறுத்தப்படுகிறது.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 34 ஆண்டுகளாக உள்ள இந்தக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போதே, 'புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம்' என, பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான முயற்சிகளை, அப்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிரகாஷ் ஜாவடேகர் அதை வேகப்படுத்தினார்.

12ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வி

இதற்காக, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் முன்னாள் தலைவர், கே. கஸ்துாரி ரங்கன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. பா.ஜ., இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், கடந்தாண்டில், இந்தக் குழு, தன் வரைவு அறிக்கையை, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது.

மேலும், அந்த அறிக்கை, பொது மக்களின் கருத்துக்காக, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கை தொடர்பாக, லட்சக்கணக்கான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன. பல மாநிலங்கள், எம்.பி.,க்கள் குழு என, பல்வேறு தரப்புடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டது.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும், அமைச்சர்கள், பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

''புதிய உலகின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள, புதிய கல்விக் கொள்கை அவசியமாகிறது.புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரிவான விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இது வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என, பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். ''இந்தப் புதிய கல்விக் கொள்கை, நம் இந்தியாவை, அறிவுசார் சமூகமாக மாற்றும்,'' என, ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்து, மத்திய உயர் கல்வித் துறை செயலர் அமித் கரே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி மற்றும் கல்வியறிவு துறையின் செயலர் அனிதா கர்வால் விளக்கினர்.


latest tamil news
புதிய மாற்றங்கள்


புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை, தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சவால்களை மாணவர்கள் சமாளிக்கும் வகையிலும், அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் வகையிலும், படிப்பில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், இந்தக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம், கல்விக்கு செலவிடப்படும் என்ற அறிவிப்பு, கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கடந்த, 1960களில் இருந்து இந்தக் கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இனி, கல்வித் துறையாக அழைக்கப்படும் என்று, அமைச்சகத்தின் பெயரில் இருந்து சீர்திருத்தங்கள் துவங்கியுள்ளன.பள்ளிக் கல்வியில் மாற்றம்


புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை, 1 - 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.

* தற்போதுள்ள, 10 + 2 முறை மாற்றப்படுகிறது. இனி 5 + 3 + 3 + 4 என்ற முறை அமல்படுத்தப்படும்

* புதிய திட்டத்தின்படி, மாணவ - மாணவியர், 3 - 8 வயது வரை, அடித்தள நிலை என, முதல், ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 - 11 வயது வரை, தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 - 14 வயது வரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 - 18 வயது வரை, உயர் நிலைப் பள்ளி படிப்பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12ம் வரை, உயர்நிலைப் பள்ளி கல்வி இருக்கும்

* பாடப் பிரிவுகளில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்கலாம். அதுபோல், துணைப் பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, யோகா, சமூக சேவை போன்றவை, பாட திட்டத்திலேயே சேர்க்கப்படும்

* மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர்களுக்கு உள்ள அறிவு, புரிந்து கொள்ளும் தன்மையே பரிசோதிக்கப்படும்

* தொழிற் கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியுடன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்கிணைந்த, தொழில் கல்வி முறையே இருக்கும்

* மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை, நெருக்கடியை தரும் வகையில் இருக்காது

* மும்மொழி திட்டத்தில், ஒரு பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்.


உயர் கல்வியில் மாற்றம்:

உயர் கல்வி எனப்படும், பட்டப் படிப்பு முறையிலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், விரும்பி படிக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக, 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' எனப்படும், தேசிய திறன் சோதனை அமைப்பு உருவாக்கப்படும்

* இளநிலை பட்டப் படிப்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இதில், எந்த நேரத்திலும், மாணவர்கள் வெளியேறலாம்

* முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு, பட்டயம் தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும். இதற்கு மேலும், உயர்கல்வி படிக்க விரும்புவோர், நான்காம் ஆண்டு படிப்பை தொடரலாம்

* இதன் மூலம், மாணவர்கள், தங்களுடைய விருப்பதற்கேற்ப முடிவு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம், பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பை தொடர முடியாவிட்டாலும், அவர்களுக்கு, சான்றிதழ், பட்டயம், பட்டம், இவற்றில் ஏதாவது ஒன்று கிடைக்கும்

* புதிய கல்விக் கொள்கையின்படி, இணைப்பு கல்லுாரிகள் என்ற முறை, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் முழுதுமாக நீக்கப்படும்

* வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள், இந்தியாவில் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படும்

* எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு கைவிடப்படுகிறது

* சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளைத் தவிர்த்து, மற்ற உயர் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த, ஒரே கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பொதுவான நடைமுறை கொள்கை வகுக்கப்படும்

* கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்படும்

* சமஸ்கிருதம் உள்பட பல்வேறு இந்திய மொழிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க மையம் உருவாக்கப்படும்

* சமஸ்கிருத பல்கலைகள், பல்வழி கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்


கட்டணத்தில் வெளிப்படை:

கல்வி கட்டணம் குறித்து, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தாங்கள் வசூலிக்கும் கல்வி கட்டணம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கும் தணிக்கை செய்யப்படும். லாப நோக்கம் இல்லாமல், கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு கிடைக்கும் லாபத்தையும், கல்வி நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, விசாரிக்க, ஒரு புதிய வழிமுறை ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


மறுமலர்ச்சி ஏற்படும்!


கல்வித் துறையில் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சீர்திருத்தத்தை, மறுமலர்ச்சியை, புதிய கல்விக் கொள்கை அளிக்கும். புதிய அறிவுசார் உலகில், கற்கும் முறை, ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகியவை முக்கிய தேவைகளாகும். இந்தியாவை, ஒரு வலுவான அறிவு சார் மையமாக, இந்தக் கொள்கை உருமாற்றும்.
- நரேந்திர மோடி, பிரதமர்

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
02-ஆக-202022:03:10 IST Report Abuse
சோணகிரி சொரியாவின் அகரம் போன்ற அந்நிய நாட்டு மாபியாக்களின் பணத்தில் நடக்கும் மோசடி அறக்கட்டளைகளை ஊத்திமூடவேண்டும்....
Rate this:
Cancel
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
02-ஆக-202008:09:33 IST Report Abuse
தாமரை அழுகும் இப்ப இருக்குற கல்விமுறைக்கு என்ன கேடு ?
Rate this:
Cancel
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
02-ஆக-202001:42:53 IST Report Abuse
தாமரை அழுகும் இரு அவைகளிலும் விவாதம் நடத்தாமல் மாநிலங்களவையை புறக்கணித்து கல்விக்கொள்கையை நிறைவேற்றியுள்ளனர். மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததில் அவைகள் குறித்து தெளிவோ விளக்கங்களோ மாற்றங்களோ இல்லாமல் வெளியாகியுள்ளது. கல்வியாளர் நிரஞ்சன் ஆராதயா தயாரித்த வரைவறிக்கை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரையறுத்த அறிக்கையை பொருத்திப் பார்த்தால் குறைகள் இருப்பது தெரிகிறது. எதிர்காலம் தரம் குறைவாக இருப்பதாக கூறும் வல்லுநர்கள் மாற்றாக தேர்வு ஒன்றே வழி என வரையறுத்திருப்பது மனப்பாடம் செய்யும் முறையையே ஊக்குவிக்கிறது. படிப்படியாக தேர்வு மூலம் வடிகட்டும் போது இறுதியில் வாய்ப்புள்ளவர் மட்டுமே முன்னேற முடியும். எட்டாம் வகுப்புவரை தேர்ச்சி என்பதால் 73% சதவீத மாணாக்கர் படிப்பைத் தொடர்ந்தனர். இனி குறையலாம். அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. பயமுறுத்தும் சில அம்சங்கள் இருப்பது குறையாக சாமானியர்க்கு தெரிகிறது. குறைகளை களைவதும், அக்குறைகளுக்கு விளக்கமளிப்பதும் அரசின் கடமையும் கூட. கல்வியாளர் நாயக் குறிப்பிடுவார் Trinity of Indian education அதாவது quantity, quality, equality என இம்மூன்றும் மிக அவசியம் என்று. சாமானியரின் எதிர்பார்ப்பும் இம்மூன்றும் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X