சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் மாஜி எம்.எல்.ஏ. கைது

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாகர்கோவில் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாகர்கோவில் மாஜி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த 15 வயது சிறுமி, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியிடம், நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் பலாத்காரம் செய்தனர்.இதற்கு தனது தாயே ஆதரவாக இருந்தார், என தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துசிறுமியின் தாய் ஆனந்தி 45, ஆட்டோ டிரைவர்கள் பாலு 66, அசோக்குமார் 43, சிறுமியின்உறவினர் கார்த்திக் 23, கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசனை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சிறுமியை அவரது தாயார் 13 வயது முதல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது. 2017 தீபாவளியன்று சிறுமியை அவரது தாயார் நாஞ்சில் முருகேசனிடம் அழைத்து சென்றதும், அதன் பின் பல முறை சிறுமியை அவருக்கு தாயார் தாரை வார்த்ததும் தெரிந்தது.யார் இந்த முருகேசன்கோட்டார் பகுதியை சேர்ந்த சாதாரண தொழிலாளியாக இருந்து ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். அதில் அசுர வளர்ச்சி கண்ட இவர் பா.ஜ.,வில் இணைந்து பணியாற்றினார்.

கோயில்களுக்கு பணம் வாரி வழங்கி பிரபலமாகி பின்னர் அ.தி.மு.க., வில் இணைந்தார். கட்சியில் சீனியர்களை ஓரம் கட்டி 2011 தேர்தலில் நாகர்கோவில் தொகுதிக்கு சீட் பெற்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். சில நாட்கள் மட்டும் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார். 2016 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். பின் அ.ம.மு.க., வில் சேர்ந்த இவர், மீண்டும் அ.தி.மு.க., வில் இணைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
30-ஜூலை-202009:39:29 IST Report Abuse
Girija அடைமொழிக்காரர்கள் ஆபத்தானவர்கள் போல் உள்ளதே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X