தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மேலும் இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மதுரை,: மதுரை அரசு மருத்துவமனையில் மேலும் இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. எட்டாயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இவர்களின் பிளாஸ்மாவை தானமாக பெற்று, புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தி அவர்களை மீட்க முடியும். மீண்டவர்களின் பிளாஸ்மாவில் வைரஸை எதிர்த்து போரிடும் ஆன்டிபாடிகள் நிரம்பி இருக்கும்.அரசு மருத்துவமனையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேலும் இருவருக்கு டாக்டர்கள் பிளாஸ்மா சிகிச்சை அளித்துள்ளனர். இருவரும் மித பாதிப்பு இருப்பவர்கள். முதற்கட்டமாக 200 மி.லி., பிளாஸ்மா ஏற்றப்பட்டது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.டாக்டர்கள் கூறுகையில், ''தொற்றில் இருந்து மீண்ட 7 பேர் தலா 500 மி.லி., வீதம் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனர். குணமடைந்தவர்களிடம் பிளாஸ்மா தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 6 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X