சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலம் மீது படகு மோதல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் விசைப்படகு மோதி சேதமடைந்தது.

நாகை கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு, துாத்துக்குடிக்கு செல்வதற்காக 8 மீனவர்கள் ஆழ்கடல் விசைபடகில் நேற்று பாம்பன் கடற்கரை வந்தனர்.பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறக்க சில நாட்கள் ஆகும் நிலையில், நேற்று கடலில் நீரோட்டம் குறைந்திருந்ததால் படகில் இருந்த உயரமான இரும்பு கேன்ட்ரியை கழற்றி விட்டு பாலத்தை கடக்க முயன்றனர்.அப்போது டிரைவர் அறையின் மேல்பகுதி துாக்கு பாலம் மீது மோதி நின்றதில் படகு சேதம்அடைந்தது. பின் படகை மீட்டு மீண்டும் புறப்பட்ட இடத்தில் படகை நங்கூரமிட்டு நிறுத்தினர். ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X