பொது செய்தி

தமிழ்நாடு

வைகை ஆற்றில் வளரும் செடிகள் வயலுக்கு உரமாகிறது

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 வைகை ஆற்றில் வளரும்  செடிகள் வயலுக்கு உரமாகிறது

மானாமதுரை:மானாமதுரை வைகை ஆற்றுக்குள் வளர்ந்துள்ள செடிகளை வயலுக்கு உரமாக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் 5 வருடங்களாக போதிய மழை பெய்யாததாலும், வைகை ஆற்றில் தண்ணீர் வராததினாலும் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தை தரிசாக போட்டுள்ளனர்.இந்த வருடமாவது நல்ல மழை பொழியும் என்ற நம்பிக்கையில் தங்களது வயல்களை உழுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

வயல்களுக்கு இயற்கையிலேயே உரமாகும் கொளுஞ்சி மற்றும் ரணபூண்டு செடிகளை மானாமதுரை வைகை ஆற்றில் வளர்ந்து கிடக்கின்றன. தற்போது ஏராளமான விவசாயிகள் இங்குள்ள செடிகளை அறுத்துச் செல்கின்றனர்.விவசாயிகள் சிலர் கூறுகையில் இந்த செடிகள் இயற்கை உரமாகும்.முன்பெல்லாம் வயலிலேயே வளர்ந்து கிடப்பதை வைத்து உழுது நாற்றுக்கள் நட்டு வந்தோம். தற்போது இவை வயலில் வளராததால் ஆற்றுக்குள் வளர்ந்திருப்பதை அறுத்து செல்கிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X