அழியும் பனைத் தொழில் பாதுகாக்கப்படுமா

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 அழியும் பனைத் தொழில் பாதுகாக்கப்படுமா

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் மாற்றுத்தொழிலுக்கு சென்றுஉள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கிராமப்பகுதியில் ஏராளமான பனைமரங்கள்உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் இவ்வாண்டு பனைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாமல் பனைத்தொழிலாளர் சிரமப்படுகின்றனர்.

அழகன்குளம் பனைத் தொழிலாளி மரியசிங்கம்60, கூறுகையில், 'பனைமரங்களை ஆண்டு குத்தகைக்கு எடுத்து பதநீர், நுங்கு எடுப்போம். பதநீரை காய்ச்சி வடிக்கட்டி கருப்பட்டி தயாரிக்கிறோம். இவ்வாண்டு ஊரடங்கால் ஏப்ரல், மே, ஜூன் சீசன் காலக்கட்டத்திலும் வருமானம் இல்லை. நாளுக்குநாள் பனைமரங்களும் அழிந்து வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு முன் ஊரில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தோம். தற்போது 10பேர் கூட இல்லை, போதிய வருமானமின்றி மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். பனைத்தொழிலை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X