சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஏர்வாடி தர்கா அருகே கண்டெடுப்பு

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 16ம்  நுாற்றாண்டு கல்வெட்டு ஏர்வாடி தர்கா அருகே கண்டெடுப்பு

-ராமநாதபுரம் : ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையில் உள்ள தோப்பில் தமிழ், அரபி எழுத்துகள் உள்ள கி.பி., 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல்ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது: ஆறரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உள்ள கல்வெட்டுகி.பி.16ம் நூற்றாண்டை சேர்ந்தது. அதில் தமிழ், அரபி எழுத்துகள், குடுவை போன்ற குறியீடு உள்ளன. தமிழ் எழுத்துகள் அழிந்துள்ளதால் முழுதகவல் அறிய முடியவில்லை.பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கோல் எனும் அளவுகள் நடைமுறையில் இருந்தன. ஒரு கோல் என்பது 16 ஜாண் அளவாகும். கல்வெட்டில் கோல் பதின்மூன்று, தென்வடல் கோல் அஞ்சு ஆகிய அளவுகள் எழுதப்பட்டு உள்ளது. கல்வெட்டிலுள்ள தெங்கு கொத்து என்பது தென்னந்தோப்பை குறிக்கிறது.

'நாயகத்து' உட்பட சில சொற்கள் உள்ளன. இதனால் தர்காவுக்கு நிலதானம் வழங்கியதற்கான அடையாளமாக கூட கல்வெட்டு இருக்கலாம். கீழைக்கல் சொல் வருவதால் கடற்கரை வழியாக கீழக்கரைக்கு வழிகாட்டும் கல்லாகவும் இருந்திருக்கலாம்.கல்வெட்டு பகுதி யிலிருந்து 300 மீட்டர்தொலைவில் டீகப் வடிவிலான 600 ஆண்டு பழமையான பொந்தன்புளி மரம் உள்ளது. இதை பப்பாரப்புளி என்கின்றனர். வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட மரம் வணிகர் களால் ராமநாதபுரம் வந்துள்ளது. மரத்தை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்,' என்றார்.-------

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
31-ஜூலை-202019:57:18 IST Report Abuse
கதிரழகன், SSLC மரத்தில் தெய்வம் பார்ப்பது நம்ம பண்பாடு. அரபி பண்பாடு இல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X