பொது செய்தி

தமிழ்நாடு

'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் உள்ளன' என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் முறைஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, அனைத்து வகையிலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. 34 ஆண்டுகளுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தத்தில், பாராட்டத்தக்க பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது, ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம், கல்விக்கான ஆய்வு மையம் அமைக்கப்படுவது, தேசிய அளவில் ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் முறை போன்ற மாற்றங்கள், மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கும்.

நடுநிலையில் படிக்கும்போதே விரும்பிய பாடத்தை தேர்வு செய்யும் முறையும், உயர்கல்வியில் பாடச் சுமையை குறைக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், டெக்னாலஜிக்கு ஏற்ப ஆன்லைன் கல்வித் திட்டத்திற்குமுக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த, ஒரே வாரியம் அமைக்கப்பட உள்ளது.எட்டாம் வகுப்பு வரை இருந்த, இலவச கட்டாயக் கல்வி முறை, பிளஸ் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதன் மூலம், தேசிய அளவில், 2030க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைவது, எளிதில் சாத்தியமாகும்.

நாடு முழுதும் ஒரே கல்வித்தரம் என்ற முடிவும் பாராட்டத்தக்கது.நடைமுறை சிக்கல்?சென்னை சீயோன் குழும பள்ளிகளின் தலைவர் என்.விஜயன்: புதிய கல்விக் கொள்கைகளில், கல்வி தரத்தை உயர்த்தும் அம்சங்களும், நாடு முழுதும் சமமான கல்வி முறையை ஏற்படுத்தும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.தாய்மொழியுடன் கூடிய மும்மொழி கொள்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி வழி கல்வி வழங்க வேண்டும் என்ற திட்டம் வரவேற்கக்கூடியது.தாய்மொழி வழி கல்வியால், மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரியும். பாடங்களை புரிந்து, அதன் செயல்வழி தெரிந்து படிக்க உதவியாக இருக்கும்.

ஆனால், பல்வேறு மொழி பேசும் மாநிலங்களை உடைய இந்தியாவில், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சற்று சிக்கல் ஏற்படும். தமிழகத்தை எடுத்து கொண்டால், ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களின் தாய்மொழி வேறாகவும், நம் மாநில தாய்மொழி வேறாகவும் இருக்கிறது. நம் தாய்மொழியில் பாடம் நடத்தினால், இங்கே படிக்கும் பிற மாநில மாணவர்களுக்கு புரியாது.தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் படித்தால், அவர்களுக்கும், அங்குள்ள தாய்மொழி வழி கல்வி புரியாது.

இதற்கு பதில், பொதுவான முறையில், ஆங்கிலத்தில் பாடம் எடுக்கும் முறையை, தற்போதுள்ளபடி தொடர அனுமதிக்க வேண்டும்.இந்த பிரச்னையில், எந்த மொழி வழியில் மாணவர்கள் படிக்க விரும்புகின்றனர் என்பதை, பெற்றோர் மற்றும் மாணவர்களின் விருப்பத்துக்கு அனுமதிக்கலாம்.பெயர் மாற்றம்வரவேற்கிறோம்பிச்சாண்டி, முன்னாள் பேராசிரியர், கோவை: மனிதவள மேம்பாட்டு துறை என்பது, மத்திய கல்வித் துறை என மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தை வரவேற்கிறோம். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், கல்வித் துறை இன்னும் மேம்பாடு அடைய வேண்டியுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து, ஒரு ஆண்டாக பல்வேறு கலந்துரையாடல்கள், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு சில எதிர்ப்புகள் இருந்தன.அந்த எதிர்ப்புகளுக்கு, கல்விக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதா அல்லது பழைய வகையிலேயே நீடிக்கிறதா என்பதை, முழுமையாக பார்த்த பின் தான் தெரிவிக்க முடியும். சுதந்திரமானகற்றல் முறைபாலகுருசாமி, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் மற்றும் யு.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர்: சுதந்திரத்திற்கு பின், ஏழாவது முறையாக, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. எந்த கொள்கையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இக்கொள்கையை முழுமையாக அமல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளில், நாட்டின் கல்வித்தரம் உயரும்.இதில், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்து வகை படிப்புகளும், ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உயர் கல்வியில் தேர்வு செய்த பாடத்தை மட்டுமல்லாமல், எந்த பாடத்தையும் படிக்கும் சுதந்திரமான கற்றல் முறை இடம்பெற்றுள்ளது. செயல்வழி கல்வி, பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம்.சிறந்த பள்ளி கட்டமைப்புபாலகிருஷ்ணன், கல்வியாளர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர்: பிளஸ் 2 வரை கட்டாய கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்தபட்ச கல்விக்கான நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.மேலும், பள்ளிகளில் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தும் போது, முழுமையாக செயல்படுத்தும் வகையில், செயல்முறைகள் உருவாக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கல்வி,கட்டாயமாக்கப்பட்டுள்ளதை, 10ம் வகுப்பு வரை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், பிராந்திய மொழிகளுக்கான முக்கியத்துவம் குறைய வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X