பொது செய்தி

தமிழ்நாடு

கமுதக்குடி மில் கூட்டுறவுசங்க வாக்கெடுப்பு ரத்து உறுப்பினர்கள் தர்ணா

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 கமுதக்குடி மில் கூட்டுறவுசங்க வாக்கெடுப்பு ரத்து  உறுப்பினர்கள்  தர்ணா

பரமக்குடி:கமுதக்குடி பயோனியர் ஸ்பின்னர்ஸ் மில்லில் கூட்டுறவு சங்க தேர்தல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நிறுவனமான கமுதக்குடி பயோனியர் மில்லில் 750 பேர் பணியில் உள்ளனர். இங்கு தொழிலாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 225 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது.பூமிநாதன் தலைவராக உள்ளார். இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரிடம் அதற்கான கடிதத்தையும் கொடுத்துள்ளனர். கள அலுவலர் திருலோகசந்தர் முன்னிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றிதேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்ததால், சங்க உறுப்பினர்கள் மில் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X