கண்மாய் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு| Dinamalar

கண்மாய் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு

Added : ஜூலை 30, 2020
Share

கமுதி:கமுதி அருகே பொந்தம் புளியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், கண்மாய் சீரமைக்கப்பட்டு சமீபத் தில் பெய்த மழையால் கண்மாயில் மழைநீர் தேங்கியுள்ளது. பொந்தம்புளியை சேர்ந்த சிலர் டேங்கர்களில் எடுத்து கட்டுமான பணிக்கு விற்பனை செய்தனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து விவ சாயத்திற்கும் கண்மாய் நீரை பயன்படுத்த கூடாதுஎன, டேங்கர் விற்பனை யாளர்களும் கொடிபிடித்து, வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

விவசாயி பரமசிவம் கூறுகையில், ''கண்மாயில் தேங்கியுள்ள மழைநீரை நம்பி, 4 ஏக்கரில் கத்தரி,வெண்டை, பாகற்காய், பூக்கள் நடவு செய்திருந் தேன். டேங்கர் விற்பனை யாளர்களின் எதிர்ப்பால், கண்மாய் தண்ணீரை பயன்படுத்த,வருவாய் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 4 ஏக்கரில் பயிர்செய்யப்பட்ட பயிர்கள் கருகியதால் இழப்பு ஏற்பட்டுள்ளது'', என்றார்.

கமுதி வருவாய் துறையினர் கூறுகையில், ''கிராமத்தினர் கண்மாய்தண்ணீரை பயன்படுத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித் தனர். உரிய விசாரணைக்கு பின், கண்மாய் தண் ணீரை பயன்படுத்த விவ சாயிகளுக்கு தெரிவிக்கப் பட்டது'', என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X