பொது செய்தி

இந்தியா

டில்லியில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 89 சதவீதமாக உயர்வு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 89 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது குறைந்து வருகிறது.



latest tamil news


அங்கு கொரோனாவால் இதுவரை மொத்தம் 1,33310 பேர் பாதிப்பு அடைந்தனர். 1,18,633 பேர் இதுவரை குணமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 89 சதவீதமானது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,126 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.


latest tamil news



இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் டில்லியில் புதிதாக 1,035 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.33 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 26 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,907 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 17,362 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜூலை-202007:21:30 IST Report Abuse
Lion Drsekar மருந்தே கண்டுபிடிக்காத இந்த நிலையிலேயே இவ்வளவு பேர் தேறியிருக்கிறார்கள் என்றால் நமது இந்திய பாரம்பரிய மருத்துவத்துக்கு நன்றி கூறவேண்டும், ஆங்கில மருத்துவர்களும் பாரம்பரிய மருந்துகளை எடுத்துக்கொள்கிரோறார்கள் , வெளிநாட்டு ஜனாதிபதி பிரதமர் ஆகியோரும் இந்திய மருத்துவம் எடுத்துக் கொள்கிறார்கள், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பாட்டிவைத்திய முறை, , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X