பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில் :ராமநாதபுரம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து

ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கடலில் கலக்கிறது.கடலில் உள்ள அரிய வகை உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.கடலில் கழிவு நீர் கலப்பதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.

ரேஷன் கடைக்கு கட்டடம்

ஆர்.எஸ்.மங்கலம்: புல்லமடை ஊராட்சிக்குட்பட்ட வல்லமடையில் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அரிசி உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்க இடம் இல்லாததால் தனிநபரின் வீட்டில் வைக்கப்படுகிறது. ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிவாரண நிதி வழங்கல்

கீழக்கரை: கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் வீரராஜ் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மாரி முன்னிலை வகித்தார்.டாக்டர்கள் பொரோஸ்கான், ஆனந்த் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி நிவாரணம் வழங்கினார்.

மோட்டார்கள் பறிமுதல்\

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் சிலர் வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரை எடுப்பதாக கமிஷனர் விஸ்வநாதனுக்கு புகார் சென்றது. அலுவலர்கள் கோட்டை மேட்டுதெரு உள்ளிட்ட தெருக்களில் சோதனை நடத்தி 15 மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X