பந்தய குதிரையில் பறக்கும் பள்ளி மாணவன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பந்தய குதிரையில் பறக்கும் பள்ளி மாணவன்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
 பந்தய குதிரையில் பறக்கும் பள்ளி மாணவன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 14 வயது பள்ளி மாணவன் நந்தகுமார், பந்தயக் குதிரையில் வலம் வந்து அசத்துகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அய்யாப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் நந்தகுமார். குதிரை விற்கும் தொழிலை கார்த்திகேயன் செய்துள்ளார். குதிரை சந்தைகள் குறைந்து விட்டதால் கார் டிரைவராக உள்ளார். மகன் நந்தகுமார் சிறு வயதிலிருந்தே குதிரையேற்றத்தில் விருப்பம் கொண்டுள்ளார். இப்போது அருகில் உள்ள கடைக்கு கூட குதிரையில் தான் செல்கிறார். பள்ளிக்கும் குதிரையில் பறக்கிறார்.

8 வயது சிறுவனாக இருந்தபோது கேரளாவில் நடந்த போட்டியில் 3வது பரிசு வென்றார்.கல்யாண விழாக்கள், கோவில் திருவிழாக்களுக்கு குதிரையை அழைத்துச் செல்கிறார். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை குதிரையேற்றப் பயிற்சி கொடுத்து இவ்வயதிலேயே வருமானமும் ஈட்டுகிறார்.

பெற்றோர் கூறுகையில், ''ஐந்து வயதில் தனியாக குதிரை ஓட்டும்போது ஆச்சரியப்பட்டோம். இன்று வரை அதிலிருந்து மீளவில்லை, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X