சிவகங்கையில் கலங்கலான குடிநீர் சப்ளையால் பாதிப்பு| Dinamalar

சிவகங்கையில் கலங்கலான குடிநீர் சப்ளையால் பாதிப்பு

Added : ஜூலை 30, 2020
Share
சிவகங்கை:சிவகங்கை செந்தமிழ் நகரில் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக சுகாதாரமற்ற நிலையில் உள்ளது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சிவகங்கை நகராட்சி 4 வது வார்டு செந்தமிழ் நகர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.நகராட்சி சார்பில் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில்உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து,
 சிவகங்கையில் கலங்கலான குடிநீர் சப்ளையால் பாதிப்பு

சிவகங்கை:சிவகங்கை செந்தமிழ் நகரில் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக சுகாதாரமற்ற நிலையில் உள்ளது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை நகராட்சி 4 வது வார்டு செந்தமிழ் நகர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.நகராட்சி சார்பில் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில்உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, காவிரி கூட்டு குடிநீர் இப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது

நான்கு நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாகவும் சுத்திகரிப்பு செய்யாமல் சுகாதாரமற்ற நிலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் இன்று வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் விநியோகம் செய்கின்றனர். ஆற்றில் இருந்து வரும் நீரை சுத்திகரிப்பு செய்யாமல் விநியோகம் செய்வதால் நோய்பரவும் அபாயம் உள்ளது.

குடிநீர் வரியாக மட்டும் ஆண்டுக்கு 1200 ரூபாய் வசூலிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு நிலையில் மக்களுக்கு நோய் பரவினால் மருத்துவமனையில் கூட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மக்கள் சுகாதாரமற்ற நீரை பயன்படுத்த முடியாத நிலையில் அச்சத்தில் உள்ளோம், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X