பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., மனைவிக்கு பிரசவம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., மனைவிக்கு பிரசவம்

மானாமதுரை:16 ஆண்டு கழித்து குழந்தை பேறு கிடைத்த மனைவியை சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார்

மானாமதுரை அ.தி.மு.க., எம்.எல்.ஏ. நாகராஜன்.மானாமதுரை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நாகராஜன்.2003ல் திருமணமான நிலையில் கடந்த ஆண்டு மனைவி சிவசங்கரி கருவுற்றார். முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொடர் பரிசோதனைக்கு அழைத்து சென்றார்.பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அவர் கூறுகையில்,தற்போது ஏராளமானோர் தனியார் மருத்துவமனைக்கு சென்று அதிகம் செலவழித்து பிரசவம் பார்க்கின்றனர். மக்களுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வர வேண்டும் என்ற எண்ணத்தில் மனைவியை இங்கு சேர்த்தேன். அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை தான் வழங்கப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X