பொது செய்தி

தமிழ்நாடு

29 ஆயிரத்து 364 பேர்களுக்கு பரிசோதனை சுகாதார துணை இயக்குனர் தகவல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சிவகங்கை:மாவட்டத்தில் 29 ஆயிரத்து 364 பேர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,'' என சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் வேகமாக நடக்கிறது. மக்கள் அவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லுங்கள். சமூக இடைவெளி, முக கவசம் அணியுங்கள். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும். மாவட்ட அளவில் ஒன்றியத்திற்கு 3 முகாம் வீதம் ஆயிரத்து 160 காய்ச்சல் தடுப்பு சிகிச்சை முகாம் நடத்தி, அதில் 43 ஆயிரத்து 17 பேர்களுக்கு சிகிச்சை அளித்தோம்.

முகாமில் 951 பேர்களிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு சென்றுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 700 பேரின் சளி மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது.மார்ச் 30 முதல் ஜூலை 30 வரை 29 ஆயிரத்து 364 பேர்களுக்கு பரிசோதனை நடந்துள்ளது.

தற்போது 60 வயதிற்கு மேற்பட்டோர், குழந்தை, கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்கள் ஆலோசனைபடி 'ஜிங்க்' மற்றும் வைட்டமின் மாத்திரைகள் எடுக்கலாம். 3 நாட்கள் தொடர்ந்து கபசுர குடிநீர், அடிக்கடி சூடான குடிநீர் பருகவும். இது தவிர ''www.esanjeevani.opd.in'' என்ற இணையதளத்தில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆலோசனை பெறலாம். புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077யை அழைக்கவும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X