கீழடியில் தொடர் மழை அகழாய்வு பணி நிறுத்தம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 கீழடியில் தொடர் மழை அகழாய்வு பணி நிறுத்தம்

மானாமதுரை:சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலுாரில் அகழாய்வு பணி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 2020 பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இதில் கீழடியில் எட்டு குழிகளும், கொந்தகையில் ஆறு குழிகளும், அகரத்தில் ஆறு குழிகளும், மணலுாரில் ஐந்து குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்தன.

இதில் முதுமக்கள் தாழிகள், குழந்தைகளின் எலும்பு கூடு, விலங்கின் எலும்பு கூடு, கருப்பு சிவப்பு வண்ண பானைகள், உலைகலன், நத்தை கூடுகள், சமையல் பானைகள், பானை ஓடுகள், பாசி, இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.

சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கீழடி, அகரம், கொந்தகை, மணலுாரில் அகழாய்வு குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஆய்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X