கேரளாவில் கனமழை: இடுக்கிக்கு 'ரெட் அலர்ட்'

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Kerala, heavy rainfall, IMD, red alert, India Meteorological Department,கேரளா,மழை

திருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் 20.5 செ.மீ., அளவுக்கு கனமழை கொட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி துவங்கியது. கடந்த இரு தினங்களாக, அங்கு கனமழை பெய்து வருகிறது. கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.


latest tamil news


இந்நிலையில், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு, கனமழை முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கியில் 20.5 செ.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூலை-202011:57:15 IST Report Abuse
ஆப்பு வடகிழக்குக் கோடி அஸ்ஸாமானாலும், தென்மேற்கு கோடி கேரளாவானாலும் வெள்ளம்னு வந்துட்டா ஒரு தீர்வும் இல்லை. இதுலே கோதாவரிய மதுரைக்கு கொண்டுவர திட்டம் போடுறாங்க.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
30-ஜூலை-202004:32:35 IST Report Abuse
blocked user பிரனாயி விஜயனுக்கும் தங்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று மழை விடும்வரை நிரூபிக்க வேண்டியது இல்லை.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூலை-202003:12:07 IST Report Abuse
NicoleThomson கடலுக்கு செல்லும் தண்ணீரை தமிழகத்துக்கு திருப்புங்க என்று கேரளாவின் அடிவருடிகள் கேப்பாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X