தமிழ்நாடு

76 சதவீதம் பேர்!* ‛கொரோனா'வில் குணமடைந்தோர் எண்ணிக்கை* சிவகங்கையில் பாதிப்பு 1.7 சதவீதம் மட்டுமே

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

சிவகங்கை:அரசு மருத்துவமனைகளில் அளித்த தீவிர சிகிச்சை, கபசுரகுடிநீர், நிலவேம்பு கஷாயம், சித்த மருந்து வழங்கியதின் மூலம் 76 சதவீதம் பேர் குணமடைந்தனர். இங்கு இறப்பு சதவீதம் 1.7 மட்டுமே உள்ளது.

இம்மாவட்டத்தில் மார்ச் 30ல் இருந்து டில்லி, மும்பை, சென்னையில் இருந்து பலர் கொரோனா தொற்றுடன் வந்தனர். அவர்கள் மூலம் தொற்று பரவியதால் ஜூலை 29 வரை 2 ஆயிரத்து 182 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை, தியானம், யோகா பயிற்சி, கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம், மூலிகை பொடி வழங்கியதின் மூலம் தொற்றின் வேகத்தை குறைத்து பலர் பூரண குணமடைந்து சென்றுள்ளனர்.


* 1657 பேர் குணமாகினர்:



4 மாதங்களில் தொற்றுடன் வந்த 2 ஆயிரத்து 182 பேர்களில், 1657 பேர் குணமடைந்தனர். இம் மாவட்டத்தில் குணமடைந்தோர் சதவீதம் 76 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 487 பேர் மட்டுமே அரசு மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெறுகின்றனர். மூச்சு திணறல், சர்க்கரை, இருதய நோய் பாதிப்புடன் கொரோனா தொற்று ஏற்பட்டு 39 பேர் இறந்துள்ளனர். இங்கு இறப்பு சதவீதம் 1.7 க்குள் உள்ளது.

இறப்பை விட குணமடைந்தோர் சதவீதம் உயர்வால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இருப்பினும், கொரோனாவின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் நடைமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.


* 1131 பேர் குணமாகினர்:



சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மட்டுமே தொற்றுடன் வந்த 1313 பேர்களுக்கு தீவிர சிகிச்சை, தியானம், சத்தான உணவு வழங்கியதன் மூலம் 1131 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தொற்றுடன் 143 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு சதவீதம் 1.7 மட்டுமே.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X