அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி?

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
வில்மிங்டன் :அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை
Kamala Harris, Joe Biden, us 2020 presidential elections, donald trump


வில்மிங்டன் :அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் ஈடுபட்டுள்ளார்.


latest tamil news
அதற்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஜோ பிடன் நேற்று முன்தினம், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரது கையில் இருந்த காகிதத்தில், சில குறிப்புகள் எழுதப்பட்டு இருந்தன. அந்த புகைப்படம், அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கலிபோர்னியா மாகாண செனட்டருமான, கமலா ஹாரிஸ் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் கீழ், மனக்கசப்புகளை மனதில் சுமக்காதவர்; என்னுடன் பிரசாரங்களில் ஈடுபட்டவர்; திறமையானவர்; பிரசாரத்திற்கு பேருதவியாக இருக்கக் கூடியவர்; மரியாதைக்குரியவர் என, ஐந்து விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.இந்நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து, ஜோ பிடனுக்கு நல்ல அபிப்ராயம் இருப்பதால், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட, அவருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து, ஜோ பிடன் தரப்பு, கருத்து தெரிவிக்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202015:30:26 IST Report Abuse
Ravi ஜோ பீடன் குரூப் - இஸ்லாம் மற்றும் கம்யூனிஸ்ட்கள் கூடாரம் - இன்று அமெரிக்காவில் நடக்கும் எல்லா கலவரங்களுக்கு இவர்களே காரணம் கமலா இந்தியா வம்சாவளியாக இருந்தாலும் இந்தியாவிற்கு எதிரானவர் இவர்கள் வந்தால் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் நல்லதல்ல இப்போதைய உலக அரசியல் நிலைக்கும், சீனாவை அடக்கி இந்தியாவிற்கு ஆதரவாக இருக்க டிரம்ப் மீண்டும் வரவேண்டும் இன்று இந்தியா நிமிர்ந்து நின்று பலநாடுகளின் ஆதரவு பெற்று ஆயுத கொள்முதலை தங்கு தடை இன்றி பெறுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தான் முதல் காரணம் Let Trump win for the best of America and the world He is the first one to come against China and going strong that save the world and India from the axis of the evil of communist China and terrorist Pakistan I don't think Joe Biden capable of doing this - we need Trump in the White House for another 4 years
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
31-ஜூலை-202023:17:46 IST Report Abuse
தல புராணம்// ஆயுத கொள்முதலை தங்கு தடை இன்றி பெறுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தான் // நாட்டுமக்களின், ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி, பொதுத்துறை நிறுவனங்களை மொட்டையடித்து விற்று, இந்தியாவை விற்று கிடைத்த பணத்தை, மக்கள் நலனுக்காக செலவிடாமல், கார்ப்பரேட் கடனை தள்ளுபடி செஞ்சும், காயலாங்கடை தளவாடங்களை வாங்கி கமிஷன் அடிக்கும் கொள்ளைக்கூட்டத்துக்கு தான் அது நல்லது.....
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
30-ஜூலை-202014:33:53 IST Report Abuse
Raj வாழ்த்துக்கள் கமலா ஹாரிஸ், ஜோ பிடன். டிரம்ப் தோல்வி உறுதி
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
30-ஜூலை-202012:53:21 IST Report Abuse
Murthy மீண்டும் டிரம்ப் வந்தால், இந்தியாவின் இப்போதைய நிலைக்கு போய்விடும் பொருளாதாரம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X