மலைவாழ் மக்கள் போராட்ட அறிவிப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைவாழ் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள், பூர்வீகமாக விவசாயம் செய்து வந்த வன நிலங்களுக்கு பட்டா கோரி 2008 ல் அரசுக்கு மனுச்செய்தனர். பரிசீலனை 2018ல் நடந்தது. பாதிக்கும் மேற்பட்டோருக்கு நிலங்கள் வழங்கவில்லை. கூடுதல் பரப்பில் விவசாயம் செய்தவர்களுக்கு குறைவான பரப்பில் நிலங்கள் அளந்து கொடுக்கப்பட்டுள்ளதாக பழங்குடியினர் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கூட்டமைப்பு செயலர் நாகபாண்டி கூறுகையில், ''ஆக.9 ல் பழங்குடியினர் கிராமங்களில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம். சுதந்திர தினத்தன்று போராட்டம் மற்றும் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை கிராமசபை கூட்டங்களில் ஒப்படைப்போம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X