பொது செய்தி

தமிழ்நாடு

மா மரங்களில் நோய் தாக்கம்  கோடை காய்ப்பும் பாதிப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி,:வைகை அணை மா மரங்களில் கோடை காய்ப்பும் இல்லாததால் குத்தகை தாரர்கள் கவலை அடைந்துள்ளனர்.வைகை அணை வலது, இடது கரைப்பகுதியில் கல்லாமை , செந்துாரம், பங்கனப்பள்ளி, மல்கோவா வகை மா மரங்கள் உள்ளன. பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மாங்காய் காய்ப்புக்கான சீசன்.

இந்த ஆண்டு சீசனில் மா மரங்களில் அஸ்வினி நோய் தாக்கியதால் விளைச்சல் பாதித்தது. வழக்கமான மகசூலில் பாதி கூட இல்லை. கோடை சீசனிலும் பூக்கள், பிஞ்சுகள் எடுக்க வில்லை.

பராமரிப்பாளர் சிவன்பாண்டியன் தெரிவித்ததாவது:கொரோனா ஊரடங்கால் விளைந்த மாங்காய்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியவில்லை.மரங்களில் காய்கள் எடுப்பு குத்தகைக்கு ரூ.பல லட்சம் செலவிட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X