பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில் :தேனி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

மீண்டும் ஏலக்காய் ஏலம்

போடி-: இங்கு நறுமணப்பொருள் வாரியம் அலுவலக 25 வயது பணியாளருக்கு ஜூலை 20 ல் கொரோனா உறுதியானதால் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் ஏலக்காய் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே இன்று (ஜூலை 30) முதல் மீண்டும் ஏலக்காய் ஏலம் துவங்கப்பட உள்ளதாக நறுமணப்பொருள் வாரியம் அறிவித்துள்ளது.

பணிகளை நிறுத்த நோட்டீஸ்

மூணாறு: கேரளா, மூணாறு நகரையொட்டி உள்ள இக்கா நகரில் பொதுப்பணித்துறை யினருக்கு சொந்தமான நிலத்தை செல்வராஜ், ராஜன், சங்கரன் ஆகியோர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வந்தனர்.அப்பணிகளை நிறுத்துமாறு மூணாறு கிராம நிர்வாக அதிகாரி சித்திக் மூவருக்கும் நோட்டீஸ் அளித்தார்.

மாசுபடுத்தப்படும் குடிநீர்

பெரியகுளம்: லயன்ஸ் கிளப் உதவிமூணாறு: கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சிவன்மலை எஸ்டேட், ஒற்றப்பாறை டிவிஷனைச் சேர்ந்த விஜி- என்பவரின் பிள்ளைகள் ஆன்லைன் கல்வி பயில, மூணாறு லயன்ஸ் கிளப் சார்பில் இலவசமாக 'டிவி' தந்து உதவினர். அதனை டி.எஸ்.பி. ரமேஷ்குமார் வழங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் ஜெயன், செயலாளர் சஜி, பொருளாளர் பென்னி, மாவட்ட முகாம் கூடுதல் செயலாளர் லிஜிஐசக் உட்பட பலர் பங்கேற்றனர்.

தற்கொலை

பெரியகுளம்: தென்கரை வாகம்புளி தெருவைச்சேர்ந்த மீன்வியாபாரி மீனாட்சி 80. அங்கு தண்ணீர் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். காரணம் குறித்து தென்கரை போலீசார் விசாரித்தனர்.

12 லட்சம் முக கவசம்

தேனி: கொரோனா பரவலை தடுக்க குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு தலா 2 வீதம் முக கவசங்களை இலவசமாக ரேஷன்கடைகள் மூலம் அரசு வழங்க உள்ளது. தேனி மாவட்டத்திற்கு 12.82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முக கவசங்கள் முதற்கட்டமாக நகர் பகுதியிலும், பின்னர் கிராமங்களிலும் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X